Mar 14, 2012

விண்டோஸ் 8 இயங்குதளத்துக்கு தேவையான வன்பொருட்கள்?

விண்டோஸ் 8 இயங்க எத்தகைய ஹார்ட் வேர் அமைந்த கம்ப்யூட்டர் தேவையாய் இருக்கும்? இந்த கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கும். இதற்கான பதில்மிகவும் எளியது. 

விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கும் அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8 இயங்கும். கீழ்க்காணும் ஹார்ட்வேர் தேவைகளை இதற்கெனப் பட்டியலிடலாம். 


1. ப்ராசசரின் இயக்க வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் மேலாக. 

2.கம்ப்யூட்டர் 32 பிட் எனில் ராம் மெமரி 1 ஜிபி; 64 பிட் எனில் ராம் மெமரி 2 ஜிபி குறைந்தது இருக்க வேண்டும். 

3. எப்போதும் தேவையான காலி டிஸ்க் இடம், 32 பிட் எனில் 16 ஜிபி. 64 பிட் எனில் 20 ஜிபி. 

4. டைரக்ட் எக்ஸ்9 கிராபிக்ஸ் டிவைஸ் WDDM 1.0 உடன் இருக்க வேண்டும். அல்லது இதனைக் காட்டிலும் உயர்வாக இருக்க வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் சில வசதிகளைப் பயன்படுத்த, சில கூடுதல் ஹார்ட்வேர் தேவைகள் அவசியம். 

அவை, Snap feature பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் கம்ப்யூட்டரின் ரெசல்யூசன் குறைந்த பட்சம் 1366x768 என இருக்க வேண்டும். நீங்கள் தொடுதிரை பயன்பாட்டினை மேற்கொள்வதாக இருந்தால், மல்ட்டி டச் ஏற்கக்கூடிய லேப்டாப், டேப்ளட் அல்லது டிஸ்பிளே திரை கொண்ட மானிட்டர் இருக்க வேண்டும். 

விண்டோஸ் 8 சிஸ்டம், ஒரே நேரத்தில் ஐந்து டச் பாய்ண்ட்களை இயக்கும் திறன் கொண்டது என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விண்டோஸ் ஸ்டோர் பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.

Mar 3, 2012

தனியுரிமைக் கொள்கையை மாற்றும் கூகுள்


நாம் ஒரு இணையதளத்திற்கு செல்லும்போது நம்மைப் பற்றி எந்த தகவல்களை அந்த இணையதளம் சேகரிக்கிறது? அவ்வாறு சேகரிக்கும் தகவல்களை அது எவ்வாறு பயன்படுத்துகிறது? என்பதை அந்த தளம் அவசியம் தெரிவிக்க வேண்டும். அது தனியுரிமைக் கொள்கை (Privacy Policy) எனப்படும். பொதுவாக மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில்  கணக்கு தொடங்கும் போதே தனியுரிமைக் கொள்கைகளை அது காட்டும். ஆனால் அது பக்கம் பக்கமாக இருப்பதால் நாம் யாரும் அதனை படிப்பதில்லை.

Twitter Facebook Digg Stumbleupon Favorites More