Showing posts with label Hardware Tips. Show all posts
Showing posts with label Hardware Tips. Show all posts

Aug 31, 2012

கம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும்.


இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். 
ராம் (RAMRandom Access Memory):

இதனை ஒத்த தொழில் நுட்ப சொற்கள் மெமரி, ரேண்டம் அக்சஸ் மெமரி, ஷார்ட் டெர்ம் மெமரி, டி.டி.ஆர். மெமரி, டி.டி.ஆர்.2 மெமரி, டி.டி.ஆர் 3 மெமரி மற்றும் மேலும் சில.
பயன்பாடு:

தற்காலிகமாக, புரோகிராம்கள் கையாளும் டேட்டாவினைத் தேக்கி வைக்கவும் மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது. இதில் பதியப்படும் டேட்டா, புரோகிராம்கள் உருவாக்கும் டேட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு, இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும்.

இந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை, இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும். ராம் மெமரி சரியாக இயங்க, தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால், அனைத்து டேட்டாவும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது.

எனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும். DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.  

ஹார்ட் ட்ரைவ் (hard drive):

ஒத்த மறு பெயர்கள் ஸ்டோரேஜ் ட்ரைவ், டிஸ்க் ட்ரைவ், எச்.டி.டி., பெர்மணன்ட் ஸ்டோரேஜ், எஸ்.எஸ்.டி. போன்றவை.
 
 பயன்பாடு:

நீண்ட நாட்கள் டேட்டாவினைப் பதிந்து பாதுகாக்க ஹார்ட் ட்ரைவ் ஸ்டோரேஜ் பயன்படுகிறது. இதற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தினாலும், இதில் பதியப்பட்ட டேட்டா உயிருடன் இருக்கும். ராம் மெமரியைக் காட்டிலும், ஸ்டோரேஜ் ஹார்ட் ட்ரைவகளின் கொள்ளளவும் மிக அதிகம்.

இதன் விலை ராம் மெமரி சிப்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. ராம் மெமரியில் பதிவதைக் காட்டிலும் இதில் சற்று வேகம் குறைவாகத்தான் பதிய முடியும். இவை இயந்திர ரீதியாக இயங்கக் கூடியவை. காந்தத் தளத்தில் பதிந்து கொள்வதன் மூலம், இவை டேட்டாவைப் பதிந்து கொள்கின்றன.

தற்போது வரும் சில ஹார்ட் ட்ரைவ்கள், ப்ளாஷ் மெமரியினைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய ட்ரைவ்களை சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SSD Solid State Disk) என அழைக்கின்றனர். நிலையான நிலையில் இருந்து செயல்படும் டிஸ்க் என்பது இந்த பெயரின் பொருள். இதில் நகரும் பொருட்கள் இருக்காது.

ஹார்ட் ட்ரைவ் குறித்துப் பேசுகையில் HDD, 7200 RPM, 5400 RPM, SSD, Raid, Disk configuration, SATA, IDE, SAS போன்ற சொற்களை நாம் அடிக்கடி சந்திக்கலாம்.

சரி, புதியதாக வாங்கும் கம்ப்யூட்டரில் மேலே சொல்லப்பட்ட இரண்டும் எந்த அளவில் இருக்க வேண்டும்? இப்போது வரும் தொடக்க நிலைக் கம்ப்யூட்டரில் 2 ஜிபி ராம் நினைவகம் தரப்படுகிறது. ஆனால், பலரும் இதனை 4 ஜிபியாக உயர்த்துகின்றனர்.

அல்லது 4 ஜிபி இருக்கும் கம்ப்யூட்டரையே வாங்க ஆர்டர் செய்கின்றனர். சற்று கூடுதலான பணிகள், கிராபிக்ஸ், அனிமேஷன் நிறைந்த விளையாட்டுக்கள், வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு, ராம் மெமரி 8 ஜிபி இருப்பது நல்லது. உங்கள் ராம் மெமரி நன்றாகச் செயல்பட வேண்டும் எனில், அது DDR31600 அல்லது அதனைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கட்டும்.

ஹார்ட் ட்ரைவ் இப்போது குறைந்தது 500 ஜிபியாக தொடக்க நிலையில் உள்ளது. ஒரு டெரா பைட் ஹார்ட் டிஸ்க் பெரும்பாலானவர்கள் விரும்பும், எதிர்பார்க்கும் அளவாக மாறி வருகிறது. சாலிட் ஸ்டேட் டிஸ்க் புழக்கத்தில் வரத் தொடங்கி விட்டாலும், விலை மற்றும் கிடைக்கும் வசதி இன்னும் எளிதாக அமையாததால், ஹார்ட் ட்ரைவ்தான் பலரும் வாங்குகின்றனர். இதன் இயக்க வேகம் குறைந்தது 7200 RPM என்ற அளவில் இருக்க வேண்டும். அல்லது உயர்வாக இருக்கலாம்.

Jul 11, 2012

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும்


கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.

May 25, 2012

Delete செய்ய முடியாத Files & Folder-களை Delete செய்வது எப்படி?

சில சமயங்களில் கணினியில் குறிப்பிட்ட Folder/File போன்றவற்றை Delete செய்யும் போது Access Denied என்று வரும். என்ன தான் பிரச்சினை என்று நமக்கு தெரியாது. ஆனால் Delete செய்யவும் இயலாது. அதன் காரணத்தையும் அவற்றை உடனடியாக Delete செய்ய என்ன வழி என்று பார்ப்போம்.

இதற்கு காரணம் உங்கள் Folder/ File கணினியில் இயங்கி கொண்டிருப்பதே ஆகும். நாம் அவற்றை Close செய்து இருந்த போதிலும், இந்த பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. பின்னணியில் அவை இயங்குவது காரணமாய் இருக்கலாம்.

Jan 16, 2012

விண்டோஸ் கணினிகளில் System Restore Point உருவாக்குவது எப்படி(XP, Windows7)

விண்டோஸ் கணினிகளில் system Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point வசதி என்பது உங்கள் கணினிகளில் ஏதேனும் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதற்கு முன்னோ, Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதோ அசம்பாவிதம் ஏற்ப்பட்டு உங்களில் கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் கிராஷ் ஆகிவிட்டால் System Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point உருவாக்கி வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல போனால் System Restore Point உங்கள் கணினி செட்டிங்க்சை பேக்கப் எடுத்து வைப்பது என கூறலாம்.

Jan 12, 2012

விண்டோஸ் பரிணாமம் பற்றிய சில குறிப்புக்கள்....

மைக்ரோசாப்ட் விண்டோஸ், 

முதல் பதிப்பில் இருந்து அண்மைய பதிப்பு (Windows version 1.0 to windows 2008) வரை எப்படி இருந்தது என இங்கே சுருக்கமாக பார்ப்போம்.




Jan 7, 2012

WiFi என்றால் என்ன?


“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்). இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது.

Dec 30, 2011

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மைப் பணிகள்


கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.

ஆனால் இவற்றிற்கு அடிப்படை யாகவும், இயக்கு வதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.

Dec 18, 2011

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?

கவனம் தேவை!!!
CPU அசெம்பிள் செய்ய நினைப்பவர்கள் இந்த பாடத்தை பார்பதக்கு முன் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது, 

உங்கள் CPU - ஐ முழுமையாக அசெம்பிள் செய்து முடிக்கும் வரை மெயின்பவர் சப்ளை எதுவும் உங்கள் CPU க்கு வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதில் அதிக கவனம் தேவை. பவர் சப்ளை மூலம் உங்கள் CPU தொடர்பு கொண்டு இருக்கும் போது நீங்கள் அசெம்பிள் பாகங்களை தொடுவது மிக ஆபத்தானது!

Dec 12, 2011

விண்டோஸ் XP இன்ஸ்டால் செய்வது எப்படி ?

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருப்பதன் காரணமாக கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்றாலே கொஞ்சம் தயக்கம் வரத்தான் செய்கிறது.


Nov 21, 2011

Error Code, Function Key பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Function key நாம் தெரிந்து கொள்ள வேண்டிய shortcut key ஆகும், அதே போல இணையத்தில் நாம் அடிக்கடி சந்திப்பது Error Codes. இன்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் Function Key பற்றியும், Error Code பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

Nov 14, 2011

Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள

Computer Configuration என்றவுடன் சாதரணமாக My computer ஐ ரைட் கிளிக் செய்தல் வருவது என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமானது இது.  
உங்கள் computer இல்  எதாவது driver problem வந்தால். இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Nov 8, 2011

கணினியில் பிரச்சனையா ! CPU வை கலட்டா தீங்க !

பொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம்(RAM),வன்தட்டு,மதர்ப்போர்டு போன்றவற்றில் பிரச்சனை வரும்போது சிபியு -வில் அந்த வன்பொருளுக்கு ஏற்றது போல ஒலியை எழுப்பும்.அந்த ஒலியை பீப் சவுண்ட் என்று கூறுவோம்.கணினியில் இருந்து ஒலி வந்த உடன் அந்த ஒலிக்கு உரிய வன்பொருளை கண்டறிந்து பிர்ச்சனைக்கு தீர்வுக் காண்போம்.

Oct 27, 2011

கம்ப்யூட்டர் கிராஷ் ஆவதற்கான காரணங்கள்


பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.


Twitter Facebook Digg Stumbleupon Favorites More