Sep 13, 2012

லினக்ஸ் வளர்ந்த வெற்றிப் பாதை

ஆகஸ்ட் 25ஆம் நாளை, லினக்ஸ் சிஸ்டத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடுவது வழக்கம். லினக்ஸ் தன் 20 ஆவது பிறந்த நாளை சென்ற ஆண்டில் கொண்டாடியது. அப்போது அதிக ஆரவாரமும் கலகலப்பும் இருந்தன.


இப்@பாது இணையம், க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மொபைல் பிரிவுகளில்,லினக்ஸின் ஆட்சி பரவலாக உள்ளது. எனவே லினக்ஸ் ஆதரவாளர்கள் நிச்சயம் இந்த ஆண்டு இதனை அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.

1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உருவெடுத்த லினக்ஸ், பல வெற்றி மைல்கற்களைத் தாண்டி பெரிய அளவில் வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. லினக்ஸ் கடந்து வந்த அந்த வேகமான முன்னேற்ற பாதையைச் சற்று இங்கே பார்க்கலாம்.

லினஸ் டோர்வால்ட்ஸ் ஆகஸ்ட் 25, 1991ல் லினக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். செப்டம்பர் 17ல், முதல் கெர்னல் வெளியானது. அக்டோபர் 5ல் பொதுமக்களுக்கு லினக்ஸ் தரப்பட்டது.

அதே ஆண்டு, நவம்பரில் மான்செஸ்டர் கம்ப்யூட்டர் மையம், தன் இணைய தளத்தில், மக்களுக்கு லினக்ஸ் கெர்னலை இலவசமாக வழங்கியது. இப்போது இருப்பதைப் போல டிஸ்ட்ரிபியூஷன் என்று எதுவும் இல்லை.

அப்போதிருந்த 5.25 அங்குல டிஸ்க்கெட்டில் இருந்து லினக்ஸை இயக்கலாம். பூட் டிஸ்க் கொண்டு முதலில் கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு, பின் கேட்கும் போது, அதனை எடுத்துவிட்டு, லினக்ஸ் டிஸ்க்கைச் செருகி, இயக்கலாம்.

1992 பிப்ரவரியில், முதல் முதலாக இன்ஸ்டால் செய்யக் கூடிய லினக்ஸ் வெளியிடப்பட்டது. டெக்சாஸ் அண்ட் எம் பல்கலைக் கழகம் (Texas A&M University) TAMU என்ற லினக்ஸ் பயனாளர் குழுவினைக் கொண்டு வந்தது. அடுத்த பெரிய லினக்ஸ் வெற்றி, முதல் வர்த்தக ரீதியான வெளியீடு நவம்பர் 1992ல் கிடைத்தது.

அடுத்ததாக, 1994ல், Debian GNU/Linux, S.u.S.E, மற்றும் Red Hat Linux எனத் தொடர்ந்து வெளியாயின. இவை இன்றும் தொடர்ந்து இயங்குவதுடன், மாற்றங்களையும் வசதிகளையும் தந்து கொண்டிருக் கின்றன. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியின் ரகசியம் என்ன? காரணம் சொல்வதென்றால், டஜன் கணக்கில் நிறைய சொல்லலாம்.

லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதுகெலும்பாக லினக்ஸ் கெர்னல் உள்ளது. இதன் குறியீடுகள் மிகச் சிறப்பும் எளிமையும் கொண்டவை. இவற்றைச் சுற்றி பல சாப்ட்வேர் தொகுப்புகள் அமைந்து, அவற்றை கெர்னல் இயக்கும் வகையில் அமைந்துள்ளன. எந்த கம்ப்யூட்டர் கட்டமைப்பிலும், எவ்வளவு பெரிய அமைப்பிலும் இயங்குவதே இதன் சிறப்பு.

லினக்ஸ் கம்யூனிட்டி என அழைக்கப்படும் குழுவில் பல வல்லுநர்களும், இதற்கென உழைப்பவர்களும் இன்னும் இயங்கி வருகின்றனர். இவர்களைச் சுற்றி, இவர்களின் திறனை உணர்ந்து, இவர்களை உற்சாகப்படுத்தி, லினக்ஸை மேம்படுத்துபவர்களும் உள்ளனர்.

எனவே லினக்ஸ் என்பது ஒரு சாப்ட்வேர் மட்டுமல்ல; அது ஒரு தொழில் நுட்ப வல்லுநர்களின் சமுதாயத்தின் பெயர் என்றால் மிகையாகாது. இதற்கு இணையாக ஒன்றை நாம் குறிப்பிட்டுக் கூற இயலவில்லை என்பதே இதன் வெற்றியின் ரகசியம் ஆகும்.

Aug 31, 2012

கம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும்.


இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். 
ராம் (RAMRandom Access Memory):

இதனை ஒத்த தொழில் நுட்ப சொற்கள் மெமரி, ரேண்டம் அக்சஸ் மெமரி, ஷார்ட் டெர்ம் மெமரி, டி.டி.ஆர். மெமரி, டி.டி.ஆர்.2 மெமரி, டி.டி.ஆர் 3 மெமரி மற்றும் மேலும் சில.
பயன்பாடு:

தற்காலிகமாக, புரோகிராம்கள் கையாளும் டேட்டாவினைத் தேக்கி வைக்கவும் மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது. இதில் பதியப்படும் டேட்டா, புரோகிராம்கள் உருவாக்கும் டேட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு, இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும்.

இந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை, இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும். ராம் மெமரி சரியாக இயங்க, தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால், அனைத்து டேட்டாவும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது.

எனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும். DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.  

ஹார்ட் ட்ரைவ் (hard drive):

ஒத்த மறு பெயர்கள் ஸ்டோரேஜ் ட்ரைவ், டிஸ்க் ட்ரைவ், எச்.டி.டி., பெர்மணன்ட் ஸ்டோரேஜ், எஸ்.எஸ்.டி. போன்றவை.
 
 பயன்பாடு:

நீண்ட நாட்கள் டேட்டாவினைப் பதிந்து பாதுகாக்க ஹார்ட் ட்ரைவ் ஸ்டோரேஜ் பயன்படுகிறது. இதற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தினாலும், இதில் பதியப்பட்ட டேட்டா உயிருடன் இருக்கும். ராம் மெமரியைக் காட்டிலும், ஸ்டோரேஜ் ஹார்ட் ட்ரைவகளின் கொள்ளளவும் மிக அதிகம்.

இதன் விலை ராம் மெமரி சிப்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. ராம் மெமரியில் பதிவதைக் காட்டிலும் இதில் சற்று வேகம் குறைவாகத்தான் பதிய முடியும். இவை இயந்திர ரீதியாக இயங்கக் கூடியவை. காந்தத் தளத்தில் பதிந்து கொள்வதன் மூலம், இவை டேட்டாவைப் பதிந்து கொள்கின்றன.

தற்போது வரும் சில ஹார்ட் ட்ரைவ்கள், ப்ளாஷ் மெமரியினைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய ட்ரைவ்களை சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SSD Solid State Disk) என அழைக்கின்றனர். நிலையான நிலையில் இருந்து செயல்படும் டிஸ்க் என்பது இந்த பெயரின் பொருள். இதில் நகரும் பொருட்கள் இருக்காது.

ஹார்ட் ட்ரைவ் குறித்துப் பேசுகையில் HDD, 7200 RPM, 5400 RPM, SSD, Raid, Disk configuration, SATA, IDE, SAS போன்ற சொற்களை நாம் அடிக்கடி சந்திக்கலாம்.

சரி, புதியதாக வாங்கும் கம்ப்யூட்டரில் மேலே சொல்லப்பட்ட இரண்டும் எந்த அளவில் இருக்க வேண்டும்? இப்போது வரும் தொடக்க நிலைக் கம்ப்யூட்டரில் 2 ஜிபி ராம் நினைவகம் தரப்படுகிறது. ஆனால், பலரும் இதனை 4 ஜிபியாக உயர்த்துகின்றனர்.

அல்லது 4 ஜிபி இருக்கும் கம்ப்யூட்டரையே வாங்க ஆர்டர் செய்கின்றனர். சற்று கூடுதலான பணிகள், கிராபிக்ஸ், அனிமேஷன் நிறைந்த விளையாட்டுக்கள், வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு, ராம் மெமரி 8 ஜிபி இருப்பது நல்லது. உங்கள் ராம் மெமரி நன்றாகச் செயல்பட வேண்டும் எனில், அது DDR31600 அல்லது அதனைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கட்டும்.

ஹார்ட் ட்ரைவ் இப்போது குறைந்தது 500 ஜிபியாக தொடக்க நிலையில் உள்ளது. ஒரு டெரா பைட் ஹார்ட் டிஸ்க் பெரும்பாலானவர்கள் விரும்பும், எதிர்பார்க்கும் அளவாக மாறி வருகிறது. சாலிட் ஸ்டேட் டிஸ்க் புழக்கத்தில் வரத் தொடங்கி விட்டாலும், விலை மற்றும் கிடைக்கும் வசதி இன்னும் எளிதாக அமையாததால், ஹார்ட் ட்ரைவ்தான் பலரும் வாங்குகின்றனர். இதன் இயக்க வேகம் குறைந்தது 7200 RPM என்ற அளவில் இருக்க வேண்டும். அல்லது உயர்வாக இருக்கலாம்.

Aug 28, 2012

Microsoft உங்களுக்கு தெரியாதவை !!!

Microsoft உலகின் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் வின்டோஸ் இந்த நிறுவனத்தினுடையதுதான். இந்த நிறுவனத்தைப் பற்றித்தான் ஆரம்ப ஐ.டி மாணவர்களுக்கு சில பஸ்சே இருக்கும். உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனம். கணினிக்குத் தேவையான பல மென்பொருட்களை தயாரிப்பது, மேம்ப்படுதுவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்றவற்றை செய்கிற நிறுவனம். 2010 இல் இன் நிறுவனத்தின் வருமானம் 62.48 பில்லியன். இன் நிறுவனத்தின் இன்டெர்னெட் explorer 9 வெளியிடப்பட்டு 1 நாளில் 2.35 மில்லியன் மக்களால் டவுன்லோட் செய்யப்பட்டது. சரி இவையெல்லாம் சாதாரணமாக சகலருக்கும் தெரிந்தவிடயங்கள். தெரியாத விடயங்களைப் பார்ப்போம்.


மைக்ரோசாப்ட்டின் இயங்குதளங்களில் உங்களால் “Con” அல்லது “con” என்ற பெயரில் போல்டர்களை உருவாக்கமுடியாது. முயற்சி செய்துபாருங்கள். நீங்கள் மேற்கூறிய பெயர்களில் போல்டரை உருவாக்கினால் எச்சரிக்கை ஒலியுடன் error messge தோன்றும்.


ஒரே செக்கண்டில் 4 லட்சம் வார்த்தைகளை மைக்குரோ சொஃப்ட் வேர்ட்டில் உருவாக்க முடியுமா? முடியும். வேர்ட்டை Open செய்ததும் =rand(200,99) என்று டைப் செய்யுங்கள் அதன் பின்னர் என்ரர் கீயை அழுத்துங்கள். அவ்வளவுதான் 4 லட்சம் வார்த்தைகள் ரெடி ஏதோ ஒரு சில கணிப்புகளின் பின் இது வெளிவருவதாக தெரிகின்றது. இதை உங்கள் நண்பர்களிடம் ஒரே செக்கண்டில் உருவாக்கமுடியுமா? என்று கூறி கலாய்க்கலாம் ஆனால் சமன்பாடு நினைவில் இருக்கவேண்டும்)

முதல் முதலில் Microsoft என்ற பெயரை பில்கேட்ஸ் ஒரு கடிதத்தில்தான் குறிப்பிட்டிருந்தார். பில்கேட்ஸ் Microsoft இன் இணை ஸ்தாபகரான Paul Allen இற்கு 1975 இல் அனுப்பிய கடிதத்திலேயே இதைக்குறிப்பிட்டிருந்தார்.

microcomputer, software என்பதன் குறியீட்டுப்பதமே Microsoft 1976 இல் Microsoft என்றபெயர் பதிவு செய்யப்பட்டது.

Microsoft இன் லோகோக்கள் பலதடவைகள் மாற்றப்பட்டுள்ளன. அண்மையிலும் Microsoft லோகோவை மாற்றியுள்ளது.



 
Microsoft வின்டோஸ் 95 இன் Starting Tune  உருவாக்கியவர் Brian Eno





கூகிள் அளவிற்கு இல்லாவிடினும் Microsoft வருடத்திற்கு 23 மில்லியன் இலவச பானங்களை தனது நிறுவன வளாகங்களில் வழங்குகின்றது. நாளொன்றுக்கு 37 000 நபர்களுக்கு இலவசமாக பானங்களை வழங்கக்கூடிய 35 உணவகங்களை Microsoft தன்வசம் கொண்டுள்ளது.

Microsoft தனது முதலாவது ஒப்பிரேட்டிங்க் சிஸ்ரத்தை உருவாக்கியதில் இருந்து இன் நிறுவனம் தனது சொஃப்ட்வேர் படைப்புக்களுக்கு கோட் நேம்களை வைத்துள்ளது. அதாவது அந்த குறிப்பிட்ட விண்டோஸ், சொஃப்ட்வேர் உருவாக்கப்படும்போது அந்த கோட் நேமினால் அழைக்கப்படும். பின்னர் அதை வெளியிடும் போது நாம் பயன்படுத்தும் பெயர் வைக்கப்படும். உதாரணம் விண்டோஸ் 7 இன் பெயர் Blackcomb. பின்னர் எமக்காக அது விண்டோஸ் 7 என்று பெயர் மாற்றமடைந்தது. விக்கியில் ஒரு லிஸ்டே இருக்கின்றது. இங்கே கிளிக்

Microsoft இல் பணிபுரியும் பணியாளர்கள் தம்மை Softie என்று அழைத்துக்கொள்கின்றார்கள். ஒரு Softie யின் சராசர் வருமானம் எவ்வளவு தெரியுமா? $106,000 கள். 32,404,796 சதுர அடிபரப்பில் அமைந்துள்ள Microsoft வளாகத்தில் மொத்தமாக 88,180 பணியாளர்கள் பணிபுரிகின்றார்கள்.

Microsoft நிறுவனம் நவீனகால ஆர்ட் கலக்ஸன்களை தனது அலுவலகத்தில் நிறைத்துவைத்துள்ளது அண்ணளவாக 50,000 வரைபடங்கள், சிற்பங்கள், பீங்கானால் ஆன பொருட்கள், காகிதத்தால் ஆன பொருட்கள் என்பவற்றை அலுவலகத்தில் பரப்பி வைத்துள்ளது. தனது பணியாளர்களுக்கு ரிலாக்ஸாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு இவைகளைப்பற்றிய கலந்துரையாடல்களும் இடையிடையில் நடப்பதுண்டு.

Microsoft நிறுவனம்தான் நேர்முகத் தேர்வுகளில் அதிக கடினமான கேள்விகளைக்கேட்கின்றது.

"சாக்கடை மூடும் மூடி ஏன் வட்டமாக இருக்கின்றது?

" 5 வருடங்களின் பின் உங்கள் பதவி என்னவாக இருக்கும்?

விண்வெளிவீரர்கள் பயன்படுத்தும் கொஃபிமேக்கரை டிஸைன் செய்யவும். இப்படிக்கேட்கின்றது Microsoft.

Microsoft 10,000 காப்புரிமைகளை தொகுப்புக்களை தன்வசம் வைத்துள்ளது. வருடத்திற்கு 3000 காப்புரிமை தொகுப்புக்கள் சேரும்.அமெரிக்காவின் டொப் 5 காப்புரிமை உரித்துடையவ்ர்களில் இன் நிறுவனமும் ஒன்று.

மேலதிக தகவல்கள் கீழே...






Jul 30, 2012

அக்டோபர் 26ல் விண்டோஸ் 8

வரும் அக்டோபர் 26ல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது தனியாக வழங்கப்பட மாட்டாது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் வழியாகக் கம்ப்யூட்டர்களில் பதிந்தே வெளியிடப்படும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.

அதனை மற்ற மதர்போர்டு உள்ள கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.

ஏற்கனவே உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டாலர் செலுத்திய பின்னர், உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.

இப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் சாப்ட்வேர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது.

முதல் முறையாக இரு வேறு வகை கம்ப்யூட்டர் சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது. டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

2011ல் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.

அன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும்; யு.எஸ்.பி. 3 கிடைக்கும்; விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்;

யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

Jul 11, 2012

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும்


கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.

Jul 6, 2012

கூகுளின் சேவைகள் நிறுத்தப்படுகின்றன ?


தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது "Spring Cleaning" என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

Jun 25, 2012

கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன?

 கூகிள் நிறுவனம் தனது Google Docs சேவையினை மேம்படுத்தி கூகிள் ட்ரைவ் (Google Drive) என்னும் புதிய சேவையினை தொடங்கியுள்ளது. இது நமது கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்க உதவும் மேக சேமிப்பு சேவையாகும்(Cloud storage service).

Jun 11, 2012

விண்டோஸ் 8 ரீபூட் இல்லை

சென்ற வாரம் மைக்ரோசாப்ட் தன் வலை மனைச் செய்தியில், வர இருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ரீபூட் ஆகும் பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டதாகவும், இனி சிஸ்டம் தானாக, சின்ன சின்ன பிரச்னைகளுக் கெல்லாம், ரீ பூட் ஆகாது என்றும் அறிவித்துள்ளது.

Twitter Facebook Digg Stumbleupon Favorites More