Apr 30, 2012

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.

ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.


ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள்.


இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:



சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.


ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:


1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படிWidget-களை வைத்துக் கொள்ளலாம்.


2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும்.

3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.

4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும். உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :)

5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்).

மேலும் பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்கவிக்கிபீடியாவில் பார்க்கவும்.


ஆன்ட்ராய்ட் பயன்பாடு:

ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.


Android Market:

ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

Apr 18, 2012

சந்தைக்கு வர இருக்கும் கூகுளின் அதிசய கண்ணாடி [வீடியோ இணைப்பு]

கட்டுபாடில்லா இணையத்தை தனது கட்டு பாட்டில் வைத்து கொண்டிருப்பது கூகுள் நிறுவனம். நீங்கள் இணையத்தை உபயோகிப்பவர்களாக இருந்தால் தினமும் ஏதாவது ஒரு கூகுள் தயாரிப்பை கண்டிப்பாக உபயோக படுத்துவீர்கள். பிளாக்கர், யூடியுப், ஜிமெயில், பிளஸ் இப்படி பல தயாரிப்புகளை வழங்குகிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது கூகுள் நிறுவனம் ஒரு புதிய வகை கண்ணாடியை அறிமுக படுத்தியுள்ளது.

Mar 14, 2012

விண்டோஸ் 8 இயங்குதளத்துக்கு தேவையான வன்பொருட்கள்?

விண்டோஸ் 8 இயங்க எத்தகைய ஹார்ட் வேர் அமைந்த கம்ப்யூட்டர் தேவையாய் இருக்கும்? இந்த கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கும். இதற்கான பதில்மிகவும் எளியது. 

விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கும் அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8 இயங்கும். கீழ்க்காணும் ஹார்ட்வேர் தேவைகளை இதற்கெனப் பட்டியலிடலாம். 


1. ப்ராசசரின் இயக்க வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் மேலாக. 

2.கம்ப்யூட்டர் 32 பிட் எனில் ராம் மெமரி 1 ஜிபி; 64 பிட் எனில் ராம் மெமரி 2 ஜிபி குறைந்தது இருக்க வேண்டும். 

3. எப்போதும் தேவையான காலி டிஸ்க் இடம், 32 பிட் எனில் 16 ஜிபி. 64 பிட் எனில் 20 ஜிபி. 

4. டைரக்ட் எக்ஸ்9 கிராபிக்ஸ் டிவைஸ் WDDM 1.0 உடன் இருக்க வேண்டும். அல்லது இதனைக் காட்டிலும் உயர்வாக இருக்க வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் சில வசதிகளைப் பயன்படுத்த, சில கூடுதல் ஹார்ட்வேர் தேவைகள் அவசியம். 

அவை, Snap feature பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் கம்ப்யூட்டரின் ரெசல்யூசன் குறைந்த பட்சம் 1366x768 என இருக்க வேண்டும். நீங்கள் தொடுதிரை பயன்பாட்டினை மேற்கொள்வதாக இருந்தால், மல்ட்டி டச் ஏற்கக்கூடிய லேப்டாப், டேப்ளட் அல்லது டிஸ்பிளே திரை கொண்ட மானிட்டர் இருக்க வேண்டும். 

விண்டோஸ் 8 சிஸ்டம், ஒரே நேரத்தில் ஐந்து டச் பாய்ண்ட்களை இயக்கும் திறன் கொண்டது என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விண்டோஸ் ஸ்டோர் பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.

Mar 3, 2012

தனியுரிமைக் கொள்கையை மாற்றும் கூகுள்


நாம் ஒரு இணையதளத்திற்கு செல்லும்போது நம்மைப் பற்றி எந்த தகவல்களை அந்த இணையதளம் சேகரிக்கிறது? அவ்வாறு சேகரிக்கும் தகவல்களை அது எவ்வாறு பயன்படுத்துகிறது? என்பதை அந்த தளம் அவசியம் தெரிவிக்க வேண்டும். அது தனியுரிமைக் கொள்கை (Privacy Policy) எனப்படும். பொதுவாக மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில்  கணக்கு தொடங்கும் போதே தனியுரிமைக் கொள்கைகளை அது காட்டும். ஆனால் அது பக்கம் பக்கமாக இருப்பதால் நாம் யாரும் அதனை படிப்பதில்லை.

Feb 27, 2012

உங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் கணினி பாதுகாப்பானதா ???


இணையம் என்னும் சமுத்திரத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக உலவ விடுவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கடினமாக உள்ளது . கட்டுப்பாடு அல்லாத இணைய வசதி என்றுமே குழைந்தைகளுக்கு பாதுகாப்பாக இருந்தது இல்லை .உங்கள் கணினியில் உள்ள இணைய வசதியை பாதுகாப்பாக வைத்திருக்கா விடின் அது உங்கள் குழந்தையின் பாதுகாப்போடு சமரசம் செய்து கொள்வதற்கு நிகரானதாகும் .

Feb 21, 2012

வர இருக்கும் வின்டோஸ் 8 பாவணையை இலவசமாக முன்னோட்டம் பார்க்க!


வர இருக்கும் வின்டோஸ் 8 ( Windows 8) இன் தோற்றத்திற்கு ஏற்ப உங்கள் கணனியை மாற்றியமைத்துப்பார்க்க இதோ ஒரு சந்தர்ப்பம். இவ் மென்பொருளை நிறுவி உங்கள் கணனியின் வெளி-இயங்குதள‌த்தோற்றத்தை முற்றாக வின்டோஸ் 8 இனைதைப்போன்று மாற்றிக் கொள்ளலாம்.

ரெஜிஸ்டர் கோட் / பதிவு எண் தேவைப்படாது! 
பன்மொழித்தன்மையுடையது.

Feb 15, 2012

சைபர் க்ரைம் - ஒரு பார்வை


இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

Feb 9, 2012

கூகுள் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க - Terminal for Google


கூகுள் பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு கிளிக் செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.


நீட்சியின் பயன்கள்:

  • ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அடிக்கடி உபயோகிக்கும் கூகுள் சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே கிளிக்கில் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.
  • உங்களுக்கு எத்தனை கூகுள் சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
  • எந்த இணையதளத்தின் இணைய பக்கத்தையும் ஜிமெயில் மற்றும் பிளாக்கரில் share செய்யும் வசதி.
  • கூகுள் சேவைகளை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தேர்வு செய்து கொள்ளலாம்.
  • ஜிமெயில் மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு. 

உபயோகிக்கும் முறை:

இந்த Terminal for Google நீட்சியை டவுன்லோட் செய்து குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொண்ட பிறகு க்ரோமில் தோன்றும் அந்த ஐகானை கிளிக் செய்தால் கூகுள் சேவைகள் வரும் அதில் நிறைய கூகுள் சேவைகள் இருக்கும் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Options Page என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Services என்பதை கிளிக் செய்யுங்கள்.





அதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை கிளிக் செய்தால் வரும், Disabled Services என்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம். 

இனி அனைத்து சேவைகளின் URL ஞாபகம் வைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கிளிக்கில் எந்த சேவைக்கும் சுலபமாக செல்லலாம்.

Jan 16, 2012

விண்டோஸ் கணினிகளில் System Restore Point உருவாக்குவது எப்படி(XP, Windows7)

விண்டோஸ் கணினிகளில் system Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point வசதி என்பது உங்கள் கணினிகளில் ஏதேனும் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதற்கு முன்னோ, Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதோ அசம்பாவிதம் ஏற்ப்பட்டு உங்களில் கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் கிராஷ் ஆகிவிட்டால் System Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point உருவாக்கி வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல போனால் System Restore Point உங்கள் கணினி செட்டிங்க்சை பேக்கப் எடுத்து வைப்பது என கூறலாம்.

Jan 12, 2012

விண்டோஸ் பரிணாமம் பற்றிய சில குறிப்புக்கள்....

மைக்ரோசாப்ட் விண்டோஸ், 

முதல் பதிப்பில் இருந்து அண்மைய பதிப்பு (Windows version 1.0 to windows 2008) வரை எப்படி இருந்தது என இங்கே சுருக்கமாக பார்ப்போம்.




Twitter Facebook Digg Stumbleupon Favorites More