May 12, 2013

வைபர் மூலம் கணனியிலிருந்தே இலவச குறுஞ்செய்தி ,தொலைபேசி அழைப்புக்கள்

ஸ்மார்ட் தொலைபேசிகளில் இலவச குறுஞ்செய்தி மற்றும் இலவச தொலைபேசி அழைப்பிற்கு பிரபலமான வைபர் என்ற மென்பொருள் விண்டோஸ் கணினி மற்றும் மேக் இல் பயன்படுத்தக்கூடியவாறு அறிமுகமாகியுள்ளது.

முன்னர் ஆண்டிராய்ட் மற்றும் ஐபோன்களில் வைபரை நிறுவி , வைபரை நிறுவியுள்ள உங்கள் நண்பர்களுடன் இலவச குறுஞ்செய்தி மற்றும் அழைப்பை ஏற்படுத்தமுடியும்.

Jan 3, 2013

Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி?

Opera Mini Browser கைப்பேசியில் (Cell Phone,Mobile) இணைய உலாவியாக அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப் படுகிறது. Nokia Xpress Music 5310 கைப்பேசியில் Opera Mini Browser உள்ளிணைப்பாகவே கொடுக்கப்படுகிறது. Nokia Xpress Music 5310 Model னை பொறுத்தவரையில் தமிழ் எழுத்துருக்கள் மிகவும் அற்புதமாகவும், தெளிவாகவும் தெரிகிறது, தமிழ் எழுத்துருக்களுக்காக Opera Mini Browser

Dec 24, 2012

Windows 8 மற்றும் Windows 7 Bootable USB Drive ஐ உருவாக்கல்.


Windows 7, Windows 8 இயங்குதளங்களானது பொதுவாக DVD வடிவிலேயே கிடைப்பதுண்டு. கணணியிலே இயங்குதளத்தை நிறுவ வேண்டிய சந்தர்ப்பத்தில் அக் கணணியிலே DVD Drive இல்லாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு Windows 7, Windows 8USB Pen Drive மூலமாகத் Bootable USB Drive ஆகத் தயாரிக்கலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

Dec 7, 2012

WINDOWS கணினியை APPLE கணினியாக மாற்ற



நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் (Microsoft windows) கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.

Nov 5, 2012

மென்பொருள்களின் Beta Version என்றால் என்ன?


ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு அல்லது மேம்படுத்திய பிறகு அதனைச் சந்தைப்படுத்த முன்னர் மேலும் சில படிநிலைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. அவற்றுள் முதற்படியை அல்பா நிலை (Alfa stage) எனப்படும். ஆல்பா நிலையில் அம்மென்பொருள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப் பட்டு பிழைகளிருப்பின்

Oct 26, 2012

காணாமல் போன Laptop ஐ கண்டுபிடிப்பது எப்படி?



லேப்டாப் என்பது நமது தோழன் போல எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒன்றாகிவிட்டது. US Airpotrt ல் ஒவ்வொரு வாரமும் சுமார் 12,000 Laptop கள் காணாமல் போகின்றனவாம் என்று DELL இணையதளம் வெளியிட்டுள்ளது .இதனால் அதிலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன . காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம் , அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .

இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista.win 7 போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு .

Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்

முதலில்


படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள் .

Laptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க

இதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு. 



சரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி ?

Mail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி:

இந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் . இதேபோல் மொபைல் எண்ணை இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும்.




மேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம்.

(Destroy Data Automatically In Case Of Theft) 

இதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும். 



மேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு , உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும் , ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும் . சிறப்பான பாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த சிறப்பான இலவச software.



Sep 13, 2012

லினக்ஸ் வளர்ந்த வெற்றிப் பாதை

ஆகஸ்ட் 25ஆம் நாளை, லினக்ஸ் சிஸ்டத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடுவது வழக்கம். லினக்ஸ் தன் 20 ஆவது பிறந்த நாளை சென்ற ஆண்டில் கொண்டாடியது. அப்போது அதிக ஆரவாரமும் கலகலப்பும் இருந்தன.


இப்@பாது இணையம், க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மொபைல் பிரிவுகளில்,லினக்ஸின் ஆட்சி பரவலாக உள்ளது. எனவே லினக்ஸ் ஆதரவாளர்கள் நிச்சயம் இந்த ஆண்டு இதனை அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.

1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உருவெடுத்த லினக்ஸ், பல வெற்றி மைல்கற்களைத் தாண்டி பெரிய அளவில் வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. லினக்ஸ் கடந்து வந்த அந்த வேகமான முன்னேற்ற பாதையைச் சற்று இங்கே பார்க்கலாம்.

லினஸ் டோர்வால்ட்ஸ் ஆகஸ்ட் 25, 1991ல் லினக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். செப்டம்பர் 17ல், முதல் கெர்னல் வெளியானது. அக்டோபர் 5ல் பொதுமக்களுக்கு லினக்ஸ் தரப்பட்டது.

அதே ஆண்டு, நவம்பரில் மான்செஸ்டர் கம்ப்யூட்டர் மையம், தன் இணைய தளத்தில், மக்களுக்கு லினக்ஸ் கெர்னலை இலவசமாக வழங்கியது. இப்போது இருப்பதைப் போல டிஸ்ட்ரிபியூஷன் என்று எதுவும் இல்லை.

அப்போதிருந்த 5.25 அங்குல டிஸ்க்கெட்டில் இருந்து லினக்ஸை இயக்கலாம். பூட் டிஸ்க் கொண்டு முதலில் கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு, பின் கேட்கும் போது, அதனை எடுத்துவிட்டு, லினக்ஸ் டிஸ்க்கைச் செருகி, இயக்கலாம்.

1992 பிப்ரவரியில், முதல் முதலாக இன்ஸ்டால் செய்யக் கூடிய லினக்ஸ் வெளியிடப்பட்டது. டெக்சாஸ் அண்ட் எம் பல்கலைக் கழகம் (Texas A&M University) TAMU என்ற லினக்ஸ் பயனாளர் குழுவினைக் கொண்டு வந்தது. அடுத்த பெரிய லினக்ஸ் வெற்றி, முதல் வர்த்தக ரீதியான வெளியீடு நவம்பர் 1992ல் கிடைத்தது.

அடுத்ததாக, 1994ல், Debian GNU/Linux, S.u.S.E, மற்றும் Red Hat Linux எனத் தொடர்ந்து வெளியாயின. இவை இன்றும் தொடர்ந்து இயங்குவதுடன், மாற்றங்களையும் வசதிகளையும் தந்து கொண்டிருக் கின்றன. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியின் ரகசியம் என்ன? காரணம் சொல்வதென்றால், டஜன் கணக்கில் நிறைய சொல்லலாம்.

லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதுகெலும்பாக லினக்ஸ் கெர்னல் உள்ளது. இதன் குறியீடுகள் மிகச் சிறப்பும் எளிமையும் கொண்டவை. இவற்றைச் சுற்றி பல சாப்ட்வேர் தொகுப்புகள் அமைந்து, அவற்றை கெர்னல் இயக்கும் வகையில் அமைந்துள்ளன. எந்த கம்ப்யூட்டர் கட்டமைப்பிலும், எவ்வளவு பெரிய அமைப்பிலும் இயங்குவதே இதன் சிறப்பு.

லினக்ஸ் கம்யூனிட்டி என அழைக்கப்படும் குழுவில் பல வல்லுநர்களும், இதற்கென உழைப்பவர்களும் இன்னும் இயங்கி வருகின்றனர். இவர்களைச் சுற்றி, இவர்களின் திறனை உணர்ந்து, இவர்களை உற்சாகப்படுத்தி, லினக்ஸை மேம்படுத்துபவர்களும் உள்ளனர்.

எனவே லினக்ஸ் என்பது ஒரு சாப்ட்வேர் மட்டுமல்ல; அது ஒரு தொழில் நுட்ப வல்லுநர்களின் சமுதாயத்தின் பெயர் என்றால் மிகையாகாது. இதற்கு இணையாக ஒன்றை நாம் குறிப்பிட்டுக் கூற இயலவில்லை என்பதே இதன் வெற்றியின் ரகசியம் ஆகும்.

Aug 31, 2012

கம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும்.


இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். 
ராம் (RAMRandom Access Memory):

இதனை ஒத்த தொழில் நுட்ப சொற்கள் மெமரி, ரேண்டம் அக்சஸ் மெமரி, ஷார்ட் டெர்ம் மெமரி, டி.டி.ஆர். மெமரி, டி.டி.ஆர்.2 மெமரி, டி.டி.ஆர் 3 மெமரி மற்றும் மேலும் சில.
பயன்பாடு:

தற்காலிகமாக, புரோகிராம்கள் கையாளும் டேட்டாவினைத் தேக்கி வைக்கவும் மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது. இதில் பதியப்படும் டேட்டா, புரோகிராம்கள் உருவாக்கும் டேட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு, இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும்.

இந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை, இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும். ராம் மெமரி சரியாக இயங்க, தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால், அனைத்து டேட்டாவும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது.

எனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும். DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.  

ஹார்ட் ட்ரைவ் (hard drive):

ஒத்த மறு பெயர்கள் ஸ்டோரேஜ் ட்ரைவ், டிஸ்க் ட்ரைவ், எச்.டி.டி., பெர்மணன்ட் ஸ்டோரேஜ், எஸ்.எஸ்.டி. போன்றவை.
 
 பயன்பாடு:

நீண்ட நாட்கள் டேட்டாவினைப் பதிந்து பாதுகாக்க ஹார்ட் ட்ரைவ் ஸ்டோரேஜ் பயன்படுகிறது. இதற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தினாலும், இதில் பதியப்பட்ட டேட்டா உயிருடன் இருக்கும். ராம் மெமரியைக் காட்டிலும், ஸ்டோரேஜ் ஹார்ட் ட்ரைவகளின் கொள்ளளவும் மிக அதிகம்.

இதன் விலை ராம் மெமரி சிப்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. ராம் மெமரியில் பதிவதைக் காட்டிலும் இதில் சற்று வேகம் குறைவாகத்தான் பதிய முடியும். இவை இயந்திர ரீதியாக இயங்கக் கூடியவை. காந்தத் தளத்தில் பதிந்து கொள்வதன் மூலம், இவை டேட்டாவைப் பதிந்து கொள்கின்றன.

தற்போது வரும் சில ஹார்ட் ட்ரைவ்கள், ப்ளாஷ் மெமரியினைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய ட்ரைவ்களை சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SSD Solid State Disk) என அழைக்கின்றனர். நிலையான நிலையில் இருந்து செயல்படும் டிஸ்க் என்பது இந்த பெயரின் பொருள். இதில் நகரும் பொருட்கள் இருக்காது.

ஹார்ட் ட்ரைவ் குறித்துப் பேசுகையில் HDD, 7200 RPM, 5400 RPM, SSD, Raid, Disk configuration, SATA, IDE, SAS போன்ற சொற்களை நாம் அடிக்கடி சந்திக்கலாம்.

சரி, புதியதாக வாங்கும் கம்ப்யூட்டரில் மேலே சொல்லப்பட்ட இரண்டும் எந்த அளவில் இருக்க வேண்டும்? இப்போது வரும் தொடக்க நிலைக் கம்ப்யூட்டரில் 2 ஜிபி ராம் நினைவகம் தரப்படுகிறது. ஆனால், பலரும் இதனை 4 ஜிபியாக உயர்த்துகின்றனர்.

அல்லது 4 ஜிபி இருக்கும் கம்ப்யூட்டரையே வாங்க ஆர்டர் செய்கின்றனர். சற்று கூடுதலான பணிகள், கிராபிக்ஸ், அனிமேஷன் நிறைந்த விளையாட்டுக்கள், வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு, ராம் மெமரி 8 ஜிபி இருப்பது நல்லது. உங்கள் ராம் மெமரி நன்றாகச் செயல்பட வேண்டும் எனில், அது DDR31600 அல்லது அதனைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கட்டும்.

ஹார்ட் ட்ரைவ் இப்போது குறைந்தது 500 ஜிபியாக தொடக்க நிலையில் உள்ளது. ஒரு டெரா பைட் ஹார்ட் டிஸ்க் பெரும்பாலானவர்கள் விரும்பும், எதிர்பார்க்கும் அளவாக மாறி வருகிறது. சாலிட் ஸ்டேட் டிஸ்க் புழக்கத்தில் வரத் தொடங்கி விட்டாலும், விலை மற்றும் கிடைக்கும் வசதி இன்னும் எளிதாக அமையாததால், ஹார்ட் ட்ரைவ்தான் பலரும் வாங்குகின்றனர். இதன் இயக்க வேகம் குறைந்தது 7200 RPM என்ற அளவில் இருக்க வேண்டும். அல்லது உயர்வாக இருக்கலாம்.

Aug 28, 2012

Microsoft உங்களுக்கு தெரியாதவை !!!

Microsoft உலகின் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் வின்டோஸ் இந்த நிறுவனத்தினுடையதுதான். இந்த நிறுவனத்தைப் பற்றித்தான் ஆரம்ப ஐ.டி மாணவர்களுக்கு சில பஸ்சே இருக்கும். உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனம். கணினிக்குத் தேவையான பல மென்பொருட்களை தயாரிப்பது, மேம்ப்படுதுவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்றவற்றை செய்கிற நிறுவனம். 2010 இல் இன் நிறுவனத்தின் வருமானம் 62.48 பில்லியன். இன் நிறுவனத்தின் இன்டெர்னெட் explorer 9 வெளியிடப்பட்டு 1 நாளில் 2.35 மில்லியன் மக்களால் டவுன்லோட் செய்யப்பட்டது. சரி இவையெல்லாம் சாதாரணமாக சகலருக்கும் தெரிந்தவிடயங்கள். தெரியாத விடயங்களைப் பார்ப்போம்.


மைக்ரோசாப்ட்டின் இயங்குதளங்களில் உங்களால் “Con” அல்லது “con” என்ற பெயரில் போல்டர்களை உருவாக்கமுடியாது. முயற்சி செய்துபாருங்கள். நீங்கள் மேற்கூறிய பெயர்களில் போல்டரை உருவாக்கினால் எச்சரிக்கை ஒலியுடன் error messge தோன்றும்.


ஒரே செக்கண்டில் 4 லட்சம் வார்த்தைகளை மைக்குரோ சொஃப்ட் வேர்ட்டில் உருவாக்க முடியுமா? முடியும். வேர்ட்டை Open செய்ததும் =rand(200,99) என்று டைப் செய்யுங்கள் அதன் பின்னர் என்ரர் கீயை அழுத்துங்கள். அவ்வளவுதான் 4 லட்சம் வார்த்தைகள் ரெடி ஏதோ ஒரு சில கணிப்புகளின் பின் இது வெளிவருவதாக தெரிகின்றது. இதை உங்கள் நண்பர்களிடம் ஒரே செக்கண்டில் உருவாக்கமுடியுமா? என்று கூறி கலாய்க்கலாம் ஆனால் சமன்பாடு நினைவில் இருக்கவேண்டும்)

முதல் முதலில் Microsoft என்ற பெயரை பில்கேட்ஸ் ஒரு கடிதத்தில்தான் குறிப்பிட்டிருந்தார். பில்கேட்ஸ் Microsoft இன் இணை ஸ்தாபகரான Paul Allen இற்கு 1975 இல் அனுப்பிய கடிதத்திலேயே இதைக்குறிப்பிட்டிருந்தார்.

microcomputer, software என்பதன் குறியீட்டுப்பதமே Microsoft 1976 இல் Microsoft என்றபெயர் பதிவு செய்யப்பட்டது.

Microsoft இன் லோகோக்கள் பலதடவைகள் மாற்றப்பட்டுள்ளன. அண்மையிலும் Microsoft லோகோவை மாற்றியுள்ளது.



 
Microsoft வின்டோஸ் 95 இன் Starting Tune  உருவாக்கியவர் Brian Eno





கூகிள் அளவிற்கு இல்லாவிடினும் Microsoft வருடத்திற்கு 23 மில்லியன் இலவச பானங்களை தனது நிறுவன வளாகங்களில் வழங்குகின்றது. நாளொன்றுக்கு 37 000 நபர்களுக்கு இலவசமாக பானங்களை வழங்கக்கூடிய 35 உணவகங்களை Microsoft தன்வசம் கொண்டுள்ளது.

Microsoft தனது முதலாவது ஒப்பிரேட்டிங்க் சிஸ்ரத்தை உருவாக்கியதில் இருந்து இன் நிறுவனம் தனது சொஃப்ட்வேர் படைப்புக்களுக்கு கோட் நேம்களை வைத்துள்ளது. அதாவது அந்த குறிப்பிட்ட விண்டோஸ், சொஃப்ட்வேர் உருவாக்கப்படும்போது அந்த கோட் நேமினால் அழைக்கப்படும். பின்னர் அதை வெளியிடும் போது நாம் பயன்படுத்தும் பெயர் வைக்கப்படும். உதாரணம் விண்டோஸ் 7 இன் பெயர் Blackcomb. பின்னர் எமக்காக அது விண்டோஸ் 7 என்று பெயர் மாற்றமடைந்தது. விக்கியில் ஒரு லிஸ்டே இருக்கின்றது. இங்கே கிளிக்

Microsoft இல் பணிபுரியும் பணியாளர்கள் தம்மை Softie என்று அழைத்துக்கொள்கின்றார்கள். ஒரு Softie யின் சராசர் வருமானம் எவ்வளவு தெரியுமா? $106,000 கள். 32,404,796 சதுர அடிபரப்பில் அமைந்துள்ள Microsoft வளாகத்தில் மொத்தமாக 88,180 பணியாளர்கள் பணிபுரிகின்றார்கள்.

Microsoft நிறுவனம் நவீனகால ஆர்ட் கலக்ஸன்களை தனது அலுவலகத்தில் நிறைத்துவைத்துள்ளது அண்ணளவாக 50,000 வரைபடங்கள், சிற்பங்கள், பீங்கானால் ஆன பொருட்கள், காகிதத்தால் ஆன பொருட்கள் என்பவற்றை அலுவலகத்தில் பரப்பி வைத்துள்ளது. தனது பணியாளர்களுக்கு ரிலாக்ஸாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு இவைகளைப்பற்றிய கலந்துரையாடல்களும் இடையிடையில் நடப்பதுண்டு.

Microsoft நிறுவனம்தான் நேர்முகத் தேர்வுகளில் அதிக கடினமான கேள்விகளைக்கேட்கின்றது.

"சாக்கடை மூடும் மூடி ஏன் வட்டமாக இருக்கின்றது?

" 5 வருடங்களின் பின் உங்கள் பதவி என்னவாக இருக்கும்?

விண்வெளிவீரர்கள் பயன்படுத்தும் கொஃபிமேக்கரை டிஸைன் செய்யவும். இப்படிக்கேட்கின்றது Microsoft.

Microsoft 10,000 காப்புரிமைகளை தொகுப்புக்களை தன்வசம் வைத்துள்ளது. வருடத்திற்கு 3000 காப்புரிமை தொகுப்புக்கள் சேரும்.அமெரிக்காவின் டொப் 5 காப்புரிமை உரித்துடையவ்ர்களில் இன் நிறுவனமும் ஒன்று.

மேலதிக தகவல்கள் கீழே...






Twitter Facebook Digg Stumbleupon Favorites More