Windows 7, Windows 8 இயங்குதளங்களானது பொதுவாக DVD வடிவிலேயே கிடைப்பதுண்டு. கணணியிலே இயங்குதளத்தை நிறுவ வேண்டிய சந்தர்ப்பத்தில் அக் கணணியிலே DVD Drive இல்லாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு Windows 7, Windows 8 ஐ USB Pen Drive மூலமாகத் Bootable USB Drive ஆகத் தயாரிக்கலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.
இதற்காக ஒரு மென்பொருளை Microsoft Windows
7 USB/DVD Download Tool. அதை இங்கு கிளிக் செய்து தரவிறக்கி நிறுவி கொள்ள
கூடியதாயிருக்கும்.. தளத்திலிருந்து நேரடியாக இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். அத்துடன் இதற்காக 4GB அல்லது அதற்கு கூடிய USB Drive ஐ பயன்படுத்தவேண்டும்.
இப்போ உங்கள் USB Drive ஐ செருகியபின்னர் தரவிரக்கிய மென்பொருளை இயக்கிக் கொள்ளவும். இப்போ கீழ் காட்டியவாறு தோன்றும்.
இதிலே Browse என்பதை கிளிக் பண்ணி Windows 7, அல்லது Windows 8 மென்பொருளின் “ ISO File ” என்பதை தெரிவு செய்யவும். பின்னர் Next என்பதைக் கிளிக் பண்ணவும். இப்போ USB Device என்பதை தெரிவுசெய்யவும்.
இப்போ நீங்கள் பயன்படுத்தப் போகும் USB Device ஐ தெரிவு செய்யுங்கள். பின்னர் Begin copying என்பதை கிளிக் பண்ணவும்
இப்போ உங்கள் USB Device ஆனது Format செய்யப்பட்டு Windows 7அல்லது Windows 8 Bootable USB Drive தயாரிக்கப்படும்.
இப்போ 100% முடிவடைந்து Bootable USB Drive ஆனது தயரிக்கப்பட்டுவிடும்.
இப்போ My Computer ஐத் திறந்து அதிலே காணப்படும் USB Drive இல் RightClick செய்து தோன்றும் நிரலில் உள்ள Eject என்பதைக் கிளிக் செய்து USB Drive பாதுகாப்பாக கழற்றிக்கொள்ளவும்.
இப்போ நீங்கள் DVD Drive இல்லாத கணனிகளில் Windows 8 மற்றும் Windows 7 இயங்குதளத்தை நிறுவுவதற்காக உங்கள் USB Drive ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3 comments:
ல்கிமதிபிற்குரியவரே,
ஒரு நண்பர் கம்ப்யூட்டர் மெக்கானிக் மூலம் 2012 நவம்பர் மாதம் புதிய கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்த Desktop Computer வாங்கினேன். கம்பெனியின் பெயர் acer அந்த நண்பர் கொடுத்தார். என்னிடம் install windows7 professional CD தரவில்லை. அவர் சொந்த ஊருக்கு நிரந்தரமாக சென்றுவிட்டார். அவர் install செய்தது windows7 professional.
உங்களது கட்டுரைகளை இணையம் மூலம் படித்து பிறகு நாமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் என்னுடைய கம்ப்யூட்டர் எதாவதுபிரச்சினை என்றால், நானே எப்படி windows7 professional install செய்வது என்னிடம் windows7 professional CD கூட இல்லை.
கடையில் windows7 professional CD வாங்குவது என்றால் என்ன version சொல்லி வாங்க வேண்டும். அந்த CD வாங்க வேண்டுமா அல்லது window home premium வாங்க வேண்டுமா. அதை எப்படி install செய்ய வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு எளிமையாக இணையத்தில் எழுத்து மூலமாக சொல்லித் தர வேண்டும்.
சிறு சிறு தொகுப்பகக்கூட எழுதினால் போதும் என்னுடைய Email ID senthilnathanpts@gmail.com.
என்றாவது ஒரு நாள் கம்ப்யூட்டர் பிரச்சினை ஏற்பட்டு நீங்கள் சொல்லிக் கொடுத்த மாதிரி install செய்து அது success ஆகிவிட்டால் எனது சந்தோஷத்தை எழுத்து மூலமாக முதலில் உங்களிடம் தான் பகிர்ந்துக்கொள்வேன்.
குறிப்பு:
Windows install செய்யும்போது internet on செய்து இருக்கவேண்டுமா அல்லது off செய்து இருக்கவேண்டுமா என்பதை சொல்லவேண்டும். கம்ப்யூட்டரில் அ ஆவன்னா கூட எனக்கு தெரியாது. ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.
நீங்கள் எனக்கு கற்றுத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.
புகப்பகக்கலைஞர் திரு. ஜி. வெங்கட்ராம் எழுதியது.
தப்பான பாதையில் போயிக்கிட்டிருக்கோம்னு தெரிந்த வினாடியில் திரும்பிடனும். அங்கிருந்தே புதிய வாழ்க்கை ஆரம்பிக்கும். இவ்வளவு தூரம் வந்துட்டோம், இதே பாதையில் போயிடலாம்னு போயிட்டே இருந்தா வாழ்ந்த வாழ்க்கை திருப்தி இருக்காது கிடைச்சதை அமைதியா ஏத்துக்கிட்டு வாழமை பிடிச்ச்சதுக்காக போராடி வாழும் போது கிடைக்கற மனநிறைவுக்கு விலையே இல்லை. அப்படி ஒரு திருப்தியோடு வாழ்ந்தால் இதை உறுருதியா சொறேன்.
முதலில் நான் உங்களிடம் மன்னிப்புப் கேட்டுக்கொள்கிறேன், நீண்ட நாட்கள் களித்து உங்களுடைய கேள்விக்கான பதிலை இன்று நான் சொல்வதை நினைத்து....
உங்கள் கேள்விக்கான பதிலை மின் அஞ்சல் மூலமாக அனுப்பி இருக்கிறேன். நிச்சியமாக அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
அமாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததது
மீக்க நன்றிகள்
Post a Comment