Oct 21, 2011

இணையத்தில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறிவதற்கு



குறிப்பிட்ட தளத்தை திறக்கும் போது இணையப்பக்கம் தெரிவதில்லை, காரணம் இணையத்திலா அல்லது இணையப்பக்கத்திலா எதாவது பிரச்னை இருக்கும்.இதை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஆனால் இனி எளிதாக பிரச்சினை இணை இணைப்பிலா அல்லது இணையதளத்திலா என்று கண்டிபிடிக்க ஒரு தளம் உதவுகிறது.


இண்டர்நெட் சேவை கொடுக்கும் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இணையதளங்கள் தெரிவதில்லை என்றால் சில நேரங்களில் அவர்களின் பயர்பால் அல்லது ஏதாவது தடை செய்து வைத்திருக்கலாம்.அப்படிபட்ட நேரத்தில் அவர்கள் சொல்லும் பதில் இந்த இணையதளம் தற்போது வேலை செய்யவில்லை என்பது தான். ஆனால் பிரச்சினை எதில் என்று கண்டுபிடிக்க நமக்கு இந்தத்தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் இருக்கும் கட்டத்திற்குள் Enter பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்த நொடியிலே பதிலை சொல்லி விடுகிறது இந்தத்தளம்.ஆம், இணையதளம் சரியாக வேலை செய்கிறது என்றால் UP என்றும் இணையதளத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் Down என்றும் நமக்கு காட்டும். இதிலிருந்தே எளிதாக பிரச்சினையை கண்டுகொள்ளலாம்.


0 comments:

Twitter Facebook Digg Stumbleupon Favorites More