இப்பொழுது இணைய உலகில் சூடான விஷயம் இந்த கூகுள் + தான். கூகுள் துவங்கியுள்ள சமூக இணைய தளமான இந்த கூகுள்+ தளத்திற்கு ஆதரவுகள் குவிகிறது. இந்த கூகுள்+ தளத்தில் ஏராளமான வசதிகள் உள்ளன இவைகள் அனைத்தும் சொல்ல ஒரு பதிவு பத்தாது. ஆகவே ஒவ்வொரு வசதியாக பார்ப்போம். அந்த வரிசையில் நம்முடைய சாதாரண மொபைல் போனில் இருந்து SMS மூலம் கூகுள்+ அப்டேட் செய்வது எப்படி என பார்ப்போம்.
- இந்த வசதியை உபயோகிக்க உங்கள் மொபைலில் இணைய இணைப்பு தேவையில்லை.
- சாதாரணமாக ஒரு SMSக்கு எவ்வளவு உங்கள் மொபைலில் பிடிபார்களோ அதே தொகை தான் பிடிப்பார்கள். பணம் வீணாகாது.
- முதலில் உங்கள் கூகுள்+ கணக்கில் சென்று Google+ Settings என்பதை தேர்வு செய்யுங்கள்.
- அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள உங்கள் மொபைல் எண்ணை தேர்வு செய்து அருகில் உள்ள Send Verification Code என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்கள் மொபைல் எண்ணை சரியாக கொடுத்து Send verification code என்ற பட்டனை அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி(SMS) வரும்.
- அதில் ஆறு இலக்க எண் வந்திருக்கும் அந்த எண்ணை குறித்து கொண்டு Verification கட்டத்தில் கொடுத்து Confirm என்பதை கொடுத்து உங்கள் எண்ணை பதிவு செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பது போல செய்தி வரும்.
- இதில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் SMS அனுப்பினால் போதும் அது தானாக உங்கள் கூகுள் + கணக்கில் அப்டேட் ஆகும்.
SMS மூலம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் செய்திகளை பகிர:
குறுஞ்செய்தி மூலம் நாம் தகவல்களை பகிரும் பொழுது அந்த தகவல் அனைவருக்கும் செல்லாமல் ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் எப்படி பகிர்வது என பாப்போம்.
ஒரு குறிப்பிட்ட circle உள்ள நபர்களுக்கு மட்டும் செய்திகளை பகிர உங்களுடைய செய்திகளுக்கு பின் @circle name கொடுக்கவும். உதவிக்கு கீழே பாருங்கள்
Good Morning to all @Friends
Good Morning to all @Public
Good Morning to all @mrcoolinfo@gmail.com
0 comments:
Post a Comment